இது சட்டசபை தேர்தல் 2016 பற்றியது நான் அதிமுக காரன்தான் ஆனால் பொதுப்படையாக இங்கு சில விசயங்களை பகிர்கிறேன் வாய்ப்பிருந்தால் படியுங்கள்
ராஐதந்திரம் என்றால் என்ன? அரசை ஆள்பவர்கள் சூழ்ச்சி செய்பவர் பலரிடமிருந்து தன்னையும் நாட்டையும் காப்பாற்ற சில அரசியல் நாடகமாட வேண்டிய நிலை வரும். அது பல சமயங்களில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் சில சமயங்களில் அது நல்ல விளைவை ஏற்படுத்தி மக்களால் பாராட்டப்படும். அந்த ராஜதந்திரம் என்னவென்று பாருங்கள்.
2015 நவம்பர் 10 வரை அதிமுகவின் மீது எந்த ஒரு எதிர்பலையும் இல்லை சொல்லப்போனால் எதிரி கட்சியான திமுக முன்னெப்போதையும் விட மௌனித்து இருந்தது அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டுமே கவனித்து வந்தனர் மற்ற கட்சியினரும் வாய் திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் திமுக இருக்கிறதா? அல்லது இல்லையா? என சந்தேகமே வந்துவிட்டது.
பின்னர் தீபாவளி சமயம் 3 நாட்கள் சென்னையில் மழைவெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது குறிப்பாக வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர் அப்போதும் திமுகவும் பிற கட்சிகளும் அமைதியாக இருந்தன அதன் பின்னர் டிசம்பர் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட நூற்றாண்டு சாதனையை தகர்த்த பெரும் மழை அரசு நிர்வாகமே மிரண்டுதான் போனது. முதல் நாள் பெரும்மழை பெய்தபோது பெரிய அளவில் எந்த சேதாரமும் இல்லை என்றாலும் பின்னர் விடிய விடிய கொட்டிய மழையில் வரண்ட ஏரி என பேர்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரியே நிறைந்தது.
உண்மையில் அதுவரை பெரும்மழையை சாதரணமாக அணுகிய அரசு நிர்வாகம் சற்று ஆடித்தான் போனது பின்னர் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் அவசரகால நடவடிக்கை எடுப்பது குறித்து அவசர முடிவாக தவிர்க்கமுடியாத முடிவாகவும் செம்பரம்பாக்கம் ஏரி அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. அதன் பின்னர் சென்னை அள்ளோலப்பட்டது இதன் பின்னர் மீடியா முழுக்க முழுக்க தனது சுயலாபத்திற்காக சென்னையின் கோரமுகத்தை மட்டுமே பதிவிட்டது. உண்மையில் கடலூரில் ஏற்ப்பட்ட பாதிப்பு பற்றி வாய் திறக்கவில்லை.
மழை வெள்ளம் அரசியலானது, மழை வெள்ளத்தின் போது கேரளத்தில் குதூகலித்துக்கொண்டிருந்த ஸ்டாலின் மழை வெள்ளமானது அரசியலாக மாறவும் சென்னை வந்து அவரது அரசியல் காய் நகர்த்தலை ஆரம்பிக்கிறார் அதுவரை திமுக மௌனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் வடிந்தோட இடமில்லாமல் ஆக்கிரமித்தது யார் என மக்கள் யோசிக்கக்கூடாது என்பதில் திமுக கவனமாக இருந்தது. அவர்கள் கட்டிய பாலங்கள் எந்த ஓடையின் மீது எவ்வளவு ஆக்கிரமித்து என சென்னைவாசிகள் நன்றாக அறிவர்.
இந்த பெருவெள்ளம் அரசியலாக மாறியதும் தீடீரென விழித்து எழுந்ததைப்போல அனைத்து அரசியல் கட்சிகளும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் சாடியது காரணம் அவர்களுக்கு இதைவிட்டால் அரசியல் பண்ண களம் ஏதும் இல்லை. அதற்கு முன்னர் டாஸ்மாக் பற்றிய போராட்டம் எதிர் கட்சி மற்றும் பிற கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமையால் பிசுபிசுத்தது ஆனால் பெருவெள்ள அரசியல் அப்படியில்லாமல் சூடு பிடித்தது. இளைஞர்கள் பலர் ஆளும் கட்சியை விம்சிக்க ஆரம்பித்தனர் சமூகவலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அதிமுகவினர் ஜெயலலிதா படம் பொறித்த ஸ்டிக்கர்களை நிவரண பொருட்களில் ஒட்டி அனுப்பி வைத்திருந்தனர் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒரு கட்சியினர் தனிப்பட்ட முறையில் உதவும் போது யார் ஸ்டிக்கரை பொறித்தால் என்ன நிவாரண பொருள் வேண்டியவர்களுக்கு செல்கிறதா என பார்க்காமல் அதுவும் அரசியலானது. பின்னர் நிவாரண பொருட்களில் உணவுப்பொருட்களை காவல்துறையினர் அதன் தரத்தை பரிசோதிக்க நிறுத்தினர் அதையும் அரசியலாக்கி திமுக மற்றும் பிற கட்சிகள் உயிர்ப்புடன் இருப்பதாக காட்டிக்கொண்டனர். ஆனால் உண்மையில் அரசின் துரித நடவடிக்கைகளால் பேரிழப்பு தடுக்கப்பட்டு நோய்தொற்று ஏற்படாமல் அரசு மக்களை காப்பாற்றியது.
இந்த மழைவெள்ளம் வடிந்தோடிய பின்னர் ஜெயலலிதா அவரது அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்தார் அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு காய்களாக சாதுர்யமாக நகர்த்தி 2016 சட்டசபை தேர்தல் வெற்றி என்ற ஒரே குறிக்கோளுடன் செயல் பட்டு வருகிறார். கன்டிப்பாக வெற்றியுடனே முடிப்பார்.
காட்சி - 1
கட்சியின் செயற்குழு கூட்டத்தை வழக்கமாக நடத்தும் இடத்தில் நடத்தாமல் வழக்கத்துக்கு மாறான இடத்தில் நடத்தி, நடத்திய கையோடு "தக்க சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பேன்" என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு வெளிவந்து முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை உடனே திமுக காங்கிரஸுடன் கூட்டணி என்று அறிவித்து தனது தலையில் மண்ணள்ளிப்போட்டது.
காட்சி - 2
மக்கள் நல இயக்கமாக இருந்த மதிமுக+விசி+2கம்யூனிஸ்ட்களை கொண்ட அணி மக்கள் நலக்கூட்டணியாக அதிமுகவால் மாற்றப்பட்டது.
மநகூட்டணியை ஆரம்பத்தில் சரியாக யூகிக்காத திமுக அவர்கள் ஆதரவு கிடைக்கும் என நப்பாசையில் மெதுவாக காய் நகர்த்தியது.
காட்சி - 3
பாஜக அதிமுகவுன் கூட்டணிக்கு ஆசைப்பட்டு அதீத முயற்சி எடுத்து வந்த நிலையில் பாஜகவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இந்த தருணத்தில் திமுக பழையபடி காங்கிரஸை விரட்டிவிட்டுவிட்டு பாஜகவுடன் இணைய முற்பட்டது ஆனால் பாஜக தலைமை தனித்து போட்டி அல்லது எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி என அறிவித்தது.
காட்சி - 4
பாமக முதலில் இருந்தே தனியாக நிற்பதாக கூறியது அவர்களது தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என்றது உடனே நாம்தமிழர் சீமானை களத்தில் இறக்கி இளைஞர்கள் வாக்கு குறிப்பாக வன்னியர் சமுதாய இளைஞர் வாக்குகளை வேட்டையாட களமிறக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக சிலர் பேசத்தொடங்கினர் அதன் பின் இளைஞர்கள் வாக்குகள் தற்சமயம் மநகூ, பாமக, நாத மற்றும் பாஜக என பிரிகிறது.
காட்சி - 4
விஜயகாந்தின் தேமுதிக உண்மையில் மூன்றாவது பெரிய கட்சியானது திமுகவுடன் கூட்டணி அமைத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகுமே என வைகோவின் மூலமாக மநகூவில் இணைத்தது.
விஜயகாந்த் கன்டிப்பாக திமுகவுடன் கூட்டணி வைப்பார் என பெருங்கனவில் இருந்த உபிஸ் விஜயகாந்தை விமர்சிக்காமல் அவரை பாராட்டி பேசி வந்தனர் ஒரு கட்டத்தில் 63 தொகுதிகளுடன் கூட்டணி உறுதியானது என தகவலை பரப்பினர் ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதாவின் வியூக வலைக்குள் சிக்கி மநகூவில் இணைந்தார்.
காட்சி - 5
அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி அமைத்துவிட வேண்டும் என ஆசைப்பட்ட தமகா வாசனையும் மநகூவில் கோர்த்து விட்டது.
அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மூலம் எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணிக்கு ஆசை பட்டு கொண்டிருந்த வாசனை திமுக தன்வசம் இழுக்க முயற்சித்து அறிக்கையிட்டது ஆனாலும் வாசன் மநகூவில் சேர்ந்தார். அதன்பின் திமுக தோல்வி பயத்தின் உச்சத்திற்கே சென்றது.
காட்சி - 6
நியூஸ்7 & தினமலர் மற்றும் பிற ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாக வெளியிட்டது.
இந்த கருத்துக்கணிப்பிற்காக திமுக பல கோடிகளை மீடியாவிற்கு இரைத்தது ஆனால் அதிமுக ஊடகங்களை கண்டுகொள்ளவில்லை. கருத்துக்கணிப்பு வெளியான பின் திமுகவிற்கு சற்று தைரியம் வந்தது. இந்த கருத்துக்கணிப்பு அதிமுகவிற்கு எதிரானது என பொங்கும் சில ரரக்களுக்கு இதில் உள்ள தந்திரம் புரியவில்லை. அது என்னவென்றால் நியூஸ்7 அதிமுகவிற்கு ஆதரவான ஊடகம் அதில் திமுகவிற்கு ஆதரவான கருத்துக்கணிப்பு என்றால் மக்கள் மத்தியில் அதிமுக திமுக நேரடி போட்டி என பதிவாகும் அப்படி ஒரு சூழல் வந்தால் அதிமுகவிற்கு 38% கட்சி வாக்கு போதும் திமுகவின் 30% வாக்குகளை வெல்ல.
இவ்வாறு ஆரம்பம் முதலே ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையாக எடுத்து வைத்த ஜெயலலிதா சறுக்கியது பிரச்சாரத்தில் மட்டுமே ஆனாலும் தஞ்சை மற்றும் நெல்லையில் இறுதி கட்டத்தில் பிரச்சாரம் அருமையாக இருந்தது.
இந்த பதிவை பதிவிடும்போது வாக்குப்பதிவு கூட முடியவில்லை ஆனாலும் கிட்டத்தட்ட 140 முதல் 160 தொகுதிவரை அதிமுக வெற்றிபெறும். இந்த வெற்றியை ருசிக்க ஜெயலலிதா படிப்படியாக காய்களை நகர்த்தி வெற்றி பெற இருக்கிறார் இதனை ராஐ தந்திரம் என சொன்னால் மிகையாகாது.
No comments:
Post a Comment