Friday, 11 March 2016

மங்காடு...

என்ன தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது இதில் இவன் என்ன சொல்லப்போகிறான்னு பார்க்கிறீர்களா. மங்காடு என்றதும் எதாவது ஊர் பெயர் அல்லது பகுதியின் பெயர் என நினைத்தீர்களா, இல்லவே இல்லை ஒருவேளை இப்பெயரில் ஊரோ அல்லது பகுதியோ இருக்கலாம் ஆனால் இங்கு மங்காடு என்பது எனது பட்டப்பெயர்.

மேய்ப்பது எருமை இதிலென்ன பெருமை என்பது போல் நீங்கள் நினைக்கலாம் பட்டப்பெயருக்கு ஏன் இந்த அலப்பரை என்றும் நினைக்கலாம், ஆனால் காரணமிருக்கிறது இந்த பெயரை எனக்கு பட்டப்பெயராக சூட்டியது எனது பெண் குழந்தை மானுஸ்ரீ அவளுக்கு வயது 2 வயது 3 மாதங்கள்தான். அவள் எனக்கு செல்லமாக வைத்த பட்டப்பெயர்தான் மங்காடு, இப்ப புரிகிறதா எனது மகிழ்ச்சி.

இப்ப என் மகள் கூப்பிடுகின்ற மங்காடு எப்படி வந்ததென பார்ப்போம். நான் அஜித் ரசிகன் சில சமயங்களில் நண்பர்களுடன் பேசும்போது மங்காத்தாடா என்பேன் அதனால் டப்ஸ்மாஸில் மங்காத்தாடா என்ற வசனத்திற்கு நான் வாயசைத்த வீடியோ எனது மொபைலில் உள்ளது சில சமயங்களில் அவள் அதை பார்த்து அந்த வார்த்தையை உச்சரிப்பதுண்டு. என் தம்பி எனது மகளை பங்காரு என்று செல்லமாக பட்டப்பெயர் வைத்து அழைப்பான், அவ்வாறு அழைக்கையில் "நாண்டாம் சொல்லாதே" என்பாள். ஆனாலும் அவளுக்கு பங்காரு என்ற வார்த்தையில் ஒரு பிடிப்பு இருந்திருக்கிறது. எனது பொண்ணை பொருத்தமட்டில் மங்காத்தாடா+பங்காரு=மங்காடு ஆனது.

இந்தப்பெயரை சொல்லி அவள் முதன்முறையாக என்னை அழைக்கையில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏனெனில் அந்த வார்த்தையை சொல்லும்பொது அவளது சிரிப்பு வெட்கத்துடன் கலந்திருந்தது. சரி என்னை மட்டும் மங்காடு என அழைக்கிறாளா அல்லது என் தம்பியையும் அழைக்கிறாளா என பார்த்தால் அவள் என்னை மட்டுமே மங்காடு என்றழைக்கிறாள். சித்தப்பா மங்காடு இல்லையா என்றால் "சிப்பா மங்காடு நாண்டாம்" என மழழை மொழி உதிர்த்தால்.

அவள் என்னை மங்காடு என்றழைக்கையில் மங்காடுன்னா என்னம்மா அர்த்தம்னு கேட்டா "அப்பா மங்காடு" என்பாள் நீதான் மங்காடு என்றால் "மங்காடு சொல்லாத, மங்காடு சொல்லாத சண்ட" எனபாள் அந்த இன்பம் இன்னும் எவ்வளவு நாட்களோ தெரியாது ஆனால் அவள் எனக்கு வைத்திருக்கும் செல்லமான பட்டப்பெயர் மங்காடு. அந்தப்பெயரை சொல்லி என்னை அழைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

No comments:

Post a Comment