Saturday, 17 September 2016

புரட்டாசி மாதம் (சைவம், அசைவம்)

புரட்டாசி மாதம் அசைவம் கூடாது என்பதன் அறிவியல் சார்ந்த வரலாற்று உண்மைகளை இங்கு எழுதியுள்ளேன். உங்கள் மத நம்பிக்கையையோ அல்லது வழிபாட்டு முறைகளையோ குறை சொல்லும் நோக்கம் அல்ல.

முன்காலத்தில் காலம் தவறாத பருவநிலையால் ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்தால் மழைக்காலம் தொடங்கும். மழைக்காலத்தில் ஆடு, கோழி முதலிய வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் அவ்வாறு நோய்தொற்று ஏற்பட்ட பிராணிகளின் மாமிசங்களை உட்கொண்டால் உடல் உபாதைகள் ஏற்படும் இம்மாதிரியான உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும்.

மேலும் அக்காலத்தில் வேட்டையாடி காட்டு விலங்குகளின் மாமிசத்தை உண்ணும் வழக்கம் இருந்தது அது வீரத்தின் அடையாளமாகவும் விளங்கியது.  மழை காலங்களில் காட்டு விலங்குகள் மறைவான இடங்களில் பதுங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இவ்வாறான உயிர்களை வேட்டையாடுவது கோழைத்தனமான செயலாக கருதப்பட்டது ஆகையால் மழை காலத்தில் வேட்டையாடும் வழக்கம் இல்லை.

மேலும் மழைக்கால ஆரம்பத்தில் மனிதர்களாகிய நமக்கும் செரிமானம் சம்மந்தமான உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான உடல் உபாதைகளில் இருந்து மனிதனை காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் வழிமுறையை சொன்னால் ஏற்கமாட்டார்கள் என கருதியே புரட்டாசி மாதம் என்று கடவுளின் பெயராலும் மதச்சடங்குகளின் பெயராலும் சொல்லப்பட்டது அதனாலே ஏற்படையதானது.

ஆதி தமிழர்களின் ஒவ்வொரு மதம் சார்ந்த சடங்குகளிலும், பழக்க வழக்கங்களிலும் அறிவில் சார்ந்த உண்மைகள் நிறைந்துள்ளது அதனை சரியாக சொல்லப்படாமையால் நாத்தீகர்கள் மொத்த மத நம்பிக்கைகளையும் சாடுகின்றனர்.

கால மாற்றத்தால் பருவநிலையில் மாற்றமும் ஏற்பட்டுவிட்டது. புரட்டாசி மாதம் உங்கள் விரதத்தை பின்பற்றுவீர்களோ இல்லையோ குறைந்தபடசம் மழைக்கால ஆரம்பங்களில் மாமிச உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு உகந்தது.

No comments:

Post a Comment