Tuesday, 26 January 2016

தேங்காய் தண்ணீர்

எல்லோரும் கடந்து வந்த பாதைதான் ஆனாலும் எல்லோரும் எப்போதும் நினைப்பதில்லை ஆதலால் என்னால் ஆனது எழுத்தில் வடித்துள்ளேன் இனி எப்போதாவது நினைத்துப்பாருங்கள். இனி அந்த நினைவலைகள் கிராமத்து பேச்சு வழக்கில் தொடரும் கதாப்பாத்திரங்களாக அம்மா, மகன், மளிகைக்கடை அண்ணாச்சி மற்றும் மளிகைக்கடை வேலை ஆள்.
அம்மா=அ,
மகன்=ம,
அண்ணாச்சி=அண் &
வேலையாள்=வே

அ:எலேய், எலேய் (எங்க போனான்) எலேய்ய் கடக்குட்டீஈ
ம:என்னம்மா இந்த வாறேன்ன் (ச்சீ இப்ப என்ன வேலையோ).., என்னம்மா
அ:தோசைக்கு போட்டுருக்கேன் சட்னி வைக்க ரெண்டு சில்லு தேங்காவும் நூறு பொட்டுகடலையும் வாங்கியால
ம:அப்பனா எனக்கொரு தேன்முட்டாய்
அ:சரில சூட்டா போயி சட்டுன்னு வாங்கியால
ம:(தேங்கா ஒடைச்சே வச்சிருப்பானா இல்ல புது தேங்காவா ஒடைப்பானா)
அண்ணே அண்ணே ரெண்டு சில்லு தேங்கா நூறு பொட்டு கடலை தாங்கண்ணே
அண்:சில்லற வச்சிருக்கியால.
ம:சில்லறையத்தான் வச்சிருக்கேன்.
அண்:எலேய் தம்பிக்கு ரெண்டு சில்லு தேங்காவும் பொறிகடலையும் கொடுப்பா
வே:அண்ணாச்சி தேங்கா புதுசாதான் ஒடைக்கனும்
ம:அண்ணே அப்ப எனக்கு தேங்கா தண்ணி
அண்:செறட்டைய எடுத்துக்கோ
வே:நேரா பிடில
[குடித்து முடித்தவுன்]
ம:அண்ணே எவ்வளோ
அண்:ஒன்னார்ருவா
ம:இந்தாங்க... வாறண்ணே..

என்னடா கதை சொல்லுறேன்னு பிளேடு போடுவதாக நினைக்க வேண்டாம் இதில் வர இருக்கும் கருத்துக்களை சற்று படித்து உணருங்கள்.
1.அன்று கடைக்கு அனுப்பிய அம்மாக்கள் கையில் ஒரு மஞ்சப்பையை திணித்து வாங்கி வரச்சொல்லுவார்கள் நாமும் வாங்கிக்கோண்டு கடைக்கு செல்வோம் அப்போது பிளாஸ்டிக் பைகள் இல்லை.
2.நாம் எந்த வேலையாக இருந்தாலும் அம்மா கூப்பிடும் போது மனதிற்குள் சடவாக இருந்தாலும் கீழ்படிதல் என்ற நல்லொழுக்கத்தை கடைபிடித்தோம் இன்றுபோல் எதிர்த்து பேசுவதில்லை.
3.கடைத்தெருவிற்கு போகையில் தேவையில்லாவற்றை யோசிப்பதில்லை நமது அதிகபட்ச யோசனையே தேங்கா தண்ணிதான் இன்று போல் விளம்பர மோகத்தில் நாம் அன்று இல்லை.
4.கடைக்காரருடன் நல்ல முறையிலான நட்புறவை பேணி வந்தோம் இன்று போல் கடை முதலாளி யாரென்றே தெரியாமலும் தேவையான அளவின்றி தொவையில்லாத அளவில் வாங்கி குளிர் சாதனப்பெட்டியில் வைக்கும் வழக்கம் அன்றில்லை.

மொத்தத்தில் சமூகம் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது என்று நம்மில் பலர் சாதரணமாக சொல்லுகிறோம் சற்று யோசித்துப்பாருங்கள், சமூகத்தை நாம்தான் மாற்றிவிட்டோம். மீண்டும் அம்மா/மனைவி சொன்னவுடன் மஞ்சைப்பையை எடுத்துக்கோண்டு கடைத்தெருவிற்கு சென்று தேவையான அளவே பொருட்களை வாங்க முடியாதா? அப்படி வாங்கும் போது தேங்காய் உடைத்தால் தேங்கா தண்ணி கேட்டால் கொடுக்க மாட்டாங்களா?
சிந்தித்து பழைய நினைவுகளுடன் நமது சமூகத்தை தக்கவைப்போம்.

No comments:

Post a Comment