"தேனுண்ட வண்டொன்று சோமங்கி சுழல்வதைப்போல்,
நீயுண்ட உன் கண்கண்டு நானிங்கு வெட்கினேனே
தேரினையொற்றதொரு உடல் வாகினை பெற்ற
நீ எனை தீண்டிட்டால் தித்திக்குமே என்மேனி".
தேனை உணவாக உண்ட வண்டானது அதீத உணவை உண்டு அதன் களிப்பில் போதையேறியது போல சுற்றும் அதுபோல நீ உன் கண்களால் என்னை தின்றதை நான் கண்டு வெட்கப்படுகுறேன். உயர்ந்து நிற்கும் தேரைப்போல உடல் கட்டமைப்பை கண்டு நீ என்னுடைய மேனியை தீண்டினால் எனது மனது நிறைந்து பொங்கும். இதுதான் மேலே உள்ள பாடலின் அர்த்தமாகும்.
இப்பாடலையும் இப்பாடலின் அர்த்தத்தையும் படித்தவுடன் உங்களது மணக்கண்ணில் என்னவெல்லாம் ஓடும் சில காதல் கற்பனைகளும் காமம் சார்ந்த கற்பனைகளும் ஓடும். சற்றே உள்வாங்கி படிப்பவருக்கோ இந்த பாடலானது எந்த காலத்து பாடல், எவர் எழுதியது, எந்த காவியத்தில் வருகிறது, யார் யாருக்காக பாடியது என்ற ஐயம் ஏற்படும்.
உண்மையில் இந்த சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்க காலத்தையோ அல்லது காப்பியங்கள் பிறந்த காலத்தை ஒட்டியதோ அல்ல இந்த பாடல் சமகாலத்தில் அதாவது 21ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஓர் பாடலே. இந்த பாடல் தலைவன் தலைவியை நினைத்து, தலைவியின்பால் கொண்ட காதலால், தலைவி தலைவனை நினைத்து உருகுவது போல் வடிக்கப்பட்ட பாடல் பாடலாசிரியர் ஒன்றும் மிகப்பெரிய கவிஞரோ அல்லது பாடலாசிரியரோ அல்ல. உண்மையிலேயே இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு இந்த பாடலை இயற்றியவரை அறிமுகப்படுத்துகிறேன்.
#தயவுகூர்ந்து இப்பாடலை வேறு எந்த தளத்திலும் கையாள வேண்டாம்.
நீங்கதானா அக்கவிஞர்.
ReplyDelete