Thursday, 8 October 2015

தூக்கம் சித்தர்களின் விளக்கம்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
.
உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே. மருத்துவ உலகமும் இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

#படித்ததில்_ரசித்தது.

பூசணிக்காய் விதை

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்"

கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துக் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று மற்றும் ஆறு மற்றும் ஐந்தால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வரும் விடையே விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணிக்காயில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3 மற்றும் 6 மற்றும் 5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அதாவது அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

தமிழனின் அறிவும் அவன் கணித அறிவுத்திறனும் பெரும் வியப்பிற்குரியது என்பதை அக்காலம்தொட்டே நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்
எனினும் நம்மவர் திறனை போற்றவும் அவரை காக்கவும் எவரும் முன்வராததே வருத்தம்.

தமிழ் மொழி காப்போம் தமிழரின் பெருமைகளை போற்றுவோம்

தமிழ் வாழ்க தமிழர் வாழ்க...!!!

#படித்ததில்_ரசித்தது

Thursday, 1 October 2015

புதியம்புத்தூர்

புதியம்புத்தூர் என்ற ஊரானது தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு ஊர் ஆகும். இங்கு நாம் அந்த ஊரின் பெயர்காரணம் மற்றும் சிறப்புகள் பற்றி காண இருக்கிறோம்.

புதியம்புத்தூர் சற்றேரக்குறைய 400+ ஆண்டு வரலாற்றை கொண்ட ஓர் ஊராகும். இந்த ஊரானது வானம் பார்த்த பூமியாகும். வானமும் பொய்க்காது மழை தரும் இவ்வூருக்கு. இந்த ஊரில் இரண்டு குளங்கள்(கண்மாய்) உள்ளன பல நீரோடைகள் உள்ளன.

அக்காலத்தில் பருவம் தவறாது மழை பெய்தது, குளங்கள் பெருகி நீரோடைகளிலும் தண்ணீர் தாராளமாக ஓடும். இப்பகுதி வழியாக வாணிபம் செய்ய வரும் வணிகர்கள் இந்த நீரோடைகளுக்கு அருகில் சற்று ஓய்வெடுத்து செல்வது வழக்கம். அப்போது தாங்கள் கொண்டுவரும் பொருட்களை(பொதி) இறக்கி வைப்பதால் "பொதி அமர்த்தும் ஊர்" என்றும் சொல் வழக்கில் "பொதியமுத்தூர்" என்றானது அதுவே காலப்போக்கில் "புதியம்புத்தூர்" ஆனது இன்னும் சிலரோ இவ்வூரை "புதிய முத்தூர்" என்றும் கூறுகின்றனர்.

இவ்வூரில் பூர்வாங்க குடிகளாக இருந்த இல்லத்து பிள்ளைமார்கள் சிறிது விவசாயமும் மற்ற வேலைகளையும் செய்து வந்தனர் வாணிகம் செய்ய வந்த நாடார் இனத்தவர்கள் இவ்வூரின் நீர் வளத்தையும் விவசாய நிலங்களையும் பார்த்து இங்கு நிலம் வாங்கி குடிபெயர ஆரம்பித்தனர் அவர்களை தொடர்ந்து செங்குந்த முதலியார் இனத்தவர்கள், தேவர் சமூகத்தினர், தெய்வேந்திரகுல வேளாளர் இனத்தவர் மற்றும் பல சமூகத்தினர் இங்கு குடிபெயர்ந்தனர்.

விவசாயம் செழித்து ஓங்கி இந்த ஊருக்கு சிறப்பே கொய்யாபழம் என்றால் அது மிகையல்ல. பதியம்புத்தூர் கொய்யா தெற்கே குமரி முதல் மதுரை வரை புகழ் தேடி தந்தது. அது மட்டுமல்லாது பூக்கள், பருத்தி, வத்தல் மற்றும் பயிறு வகைகள் என செழித்து செல்வம் பொங்கிய ஊர் சமீப காலங்களாக மழை மற்றும் நிலத்தடி நீராதாரம் இல்லாததால் விவசாயம் மெல்ல குறைந்து போனது.

புதியம்புத்தூருக்கு கொய்யாப்பழத்திற்கு அடுத்தபடியாக பெயர் வாங்கித்தருவது ஆயத்த ஆடை(ரெடிமேட்) உற்பத்தி மற்றும் விற்பனை. சுதந்திர இந்தியாவில் சுயமாக ஒரு கிராமம் முன்னேற்ற பாதைக்கு சென்றது என்றால் அது புதியம்புத்தூர்தான். 1950ம் ஆண்டுகளில் இங்கு சாதாரண முறையில்தான் ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு வந்தன இங்கு நடக்கும் வாரச்சந்தையினால் (வியாழக்கிழமை) இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு பிரபலமடைய தொடங்கிற்று.

1960ம் ஆண்டுகளுக்கு பின்னர் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மாவட்ட அளவில் புகழ் பெற்றது பின்னர் படிப்படியாக புதியம்புத்தூரன் புதிய முகமாகவே ஆயத்த ஆடை தயாரிப்பு விளங்கிற்று. 1970ம் ஆண்டுகளில் சாதாரண பாவடை சட்டைகளுக்கு மவுசு குறைய தொடங்கியது அதனால் ஆயத்த ஆடைகளின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

1975ம் ஆண்டுகளில் உடனடியாக ஆயத்த ஆடை தயாரிப்பில் மாற்றம் ஏற்பட்டது பின்னர் கவுன், மிடி, சுடிதர் மற்றும் பல புதிய ரகங்களை உற்பத்தி செய்யத்தொடங்கி இன்றுவரை ஆயத்த ஆடை தயாரிப்பில் தமிழகத்திலே சிறந்து விளங்குகிறது. கொல்கத்தா, மும்பை, நாக்பூர் மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடை தயாரிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாமல் வியாபார போட்டியை சமாளித்து வருகிறது.

புதியம்புத்தூரில் இந்து மதம் சார்ந்தவர்கள் அதிகமாகவும், கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் குறைவாகவும், இஸ்லாம் மதம் சார்ந்த சில குடும்பங்களும் இருக்கின்றன. இங்கு மதம் சார்ந்த பிரச்சனைகள் வந்ததில்லை. இஸ்லாம் மத பண்டிகை இந்துக்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்தே கொண்டாடும் வழக்கமுள்ளது.

புதியம்புத்தூர் பழைய திருநெல்வெலி மாவட்டம் இன்றைய தூத்துக்குடி மாவட்டமான ஓட்டப்பிடாத்திற்கு அருகில் உள்ளது. புதியம்புத்தூரிலிருந்து மாவட்டத்தின் பல பகுதிக்கும் பேருந்து வசதி உள்ளது. மதுரை மற்றும் சென்னைக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது. மாவட்டத்தின் பிரதான ஊர்களாகிய தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

புதியம்புத்தூர் பஞ்சாயத்தானது தமிழகத்திலே சிறப்பு பெற்ற பஞ்சாயத்து. ஒருங்கிணைந்த புதியம்புத்தூரில் நான்கு பஞ்சாயத்து பகுதிகள் உள்ளன அவை புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமிநத்தம் மற்றும் இராஜாவின்கோவில்.

உழைப்பிற்க்கு முன்னுதாரமாக திகழும் புதியம்புத்தூரில் ஆனி மாதத்தில் ஊரில் ஏறத்தாழ அனைத்து சமுதாயத்தினருக்கும் கோவில் திருவிழா தனித்தனி கோவில்களில் நிகழும் இன்று வரை திருவிழா காலங்களில் சண்டை சச்சரவுகள் என பெரியதாக எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை.

பொதி அமத்தும் ஊரானது பின் பொதி அமத்தூராகி பின்னர் புதியம்புத்தூராகி இனி வரும் காலத்தில் புதிய முத்தூராக இருக்கிறது. நான் புதியம்புத்தூர் காரன் என்ற பெருமை எப்போதும் எனக்கு உண்டு.