Sunday, 19 March 2017

நாவலந்தேயம் இந்தியா (India) ஆன வரலாறு

நாவலந்தேயம் இந்த வார்த்தை இன்று பலருக்கு புதியதாக இருக்கலாம் ஆனால் இந்த நாவலந்தேயம் என்ற சொல் ஒரு செல்வ செழிப்பான நாடு ஆகும். அங்கு வாழ்ந்த மக்கள் அறிவில் சிறந்தவர்கள் பொருளாதாரம், நாகரீகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தில் இருந்தார்கள் எதிர்பாராத மிகப்பெரிய ஆழிப்பேரலை தாக்கியதால் உலக பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்ந அந்நாட்டு பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியது மிஞ்சிய எச்சம் இன்னமும் பொருளாதார உயர்வு பெற பிச்சை எடுக்கிறது. ஆம் அந்த நாவலந்தேயம்தான் இன்றைய இந்தியா, அதனைப்பற்றி சற்று பார்ப்போம்.

அக்காலத்தில் நாவலந்தேயத்தில் பொருளாதார தொடர்பில் இருந்த நாடுகளுக்கு நாவலந்தேயம் ஓர் சிம்மசொப்பணம், இப்போது சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் என்கிறோமே அதுபோல. அதற்கு காரணம் செல்வசெழிப்பான நாடு மட்டுமல்ல நாகரீக வளர்ச்சியிலும் தனிநபர் ஒழுக்கத்தாலும் தமிழன் தலைநிமிர்ந்து நின்றான். முக்கிய வாணிப பொருள் ஏலக்காய், மிளகு, சீரகம், கடுகு, ஆபரணங்கள், வைரம், முத்து, வாசனைத்திரவியங்கள் மற்றும் பல.

என்ன நீங்க படித்த வரலாற்றில் நாவலந்தேயம் பற்றி எதுவுமே படித்ததில்லையா? நாம் பள்ளியில் படிக்கும் வரலாறு பாடம் என்பது வரலாற்று திணிப்பே தவிர வேறெதுவுமில்லை. நான்காயிரம் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இன்றைய வரலாறு சொல்லும் வரலாற்றுக்கு முற்பட்டகாலம் அயலவர்கள் இந்தியாவில் நுழைவதற்கு முன்னர், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மனிதர்களாக குமரிக்கண்டத்தோடு இருந்த இந்தியாவில் வசித்து வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக வாழ்ந்து வந்தனர் தெற்கும், கிழக்கும், மத்தியிலும் செல்வ செழிப்பான பகுதி மேற்கே சற்று வரண்ட பகுதி வடக்கே அடர்ந்த காடுகளும் மலைத்தொடர்களுமான பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். நாவலந்தேயத்தில் ஏழு பெரிய மலைகளும் ஏழு கடல்களும் இருந்ததாக சான்றுகள் உள்ளன.

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் தனது அடையாளத்தை இழந்து பெரும்பகுதி நிலப்பரப்பை கடல் அன்னைக்கு வாரி வழங்கி வாழ்வாதார பிரச்சனையை சந்தித்தான் தமிழன் ஏறத்தாழ அவனது செல்வ செழிப்பான நிலங்கள் அனைத்தையும் இழந்து குறைந்தபட்ச நிலப்பரப்பில் பல இடங்களில் குடிபெயர்ந்தான். இந்த காலகட்டத்தில் உலக வரைபடமே மாற்றம் கண்டது, உலகின் பல பகுதிகளும் பெரும் பேரழிவை சந்தித்தன. இவை அனைத்தும் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாக இன்றைய வரலாறு நமக்கு போதிக்கிறது. ஆம் கி.மு மற்றும் கி.பி இதுதான் இன்றைய வரலாற்றின் துவக்கம். முந்தைய நாகரீகத்தை மீட்டெடுக்கும் முனைப்பு நம்மிடம் இல்லாமல் போனது.

கி.மு, கி.பி என வரலாறு துவங்கியபின் நாடு பிடிக்கும் போட்டி, எல்லையை விரிவுபடுத்தும் போட்டி, புதிய குடியிருப்புகள் உருவாக்கும் போட்டி காரணமாக பழைய வரலாற்று தடயங்கள் தேடப்படுகின்றன அதனை தேடிப்படிக்கும் போது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம் மற்றும் நாவலந்தேயம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. நாவலந்தேயம் கி.பி 13ம் நூற்றாண்டுகளில் இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு India என்றே  அறிமுககிறது. உடனடியாக உலகம் தமிழர் இருப்பிடத்தையும் இந்தியாவையும் அறியும் ஆர்வம் கொண்டு மேலும் தமிழரின் நாகரிகத்தை காணவேண்டி முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன.

அந்த காலகட்டத்தில்தான் நாவலந்தேயம், ந்தேயம் -ந்தேயா – India என்று ஆனது, இதற்கு காரணம் அவர்களின் உச்சரிப்பு. இந்த தேடலில் முதலில் அவர்களுக்கு பல தோல்விகள். அதன் பின்னர் கால ஓட்டத்தில் ஐரோப்பியர்கள் முதலில் இந்தியாவைத்தேடி ஒரு தீவுக்கூட்டத்தை கொலம்பஸ் குழுவினர் அடைகின்றனர் அந்த பகுதியை இந்தியா என நினைத்து மேற்கு திசையில் இருந்தமையால் அதனை மேற்கு இந்திய தீவுகள் (West Indies) என பெயரிடுகின்றனர். பின்னர் அடுத்த மைல்கல்லாக இன்றைய அமெரிக்காவை அமெரிக்கோ வெஸ்புகி குழவினர் அடைகின்றனர் அவர்களும் அது இந்தியா என்றெண்ணி அங்கு வாழ்ந்த பூர்வ குடியினரை செவ்விந்தியர்கள் என்றனர் (ஆக இந்தியா என்ற பெயர் கொலம்பஸ் காலத்திற்கு முன்பிருந்தே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம்).

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பின்னர் வாஸ்கோடகாமா குழுவினர் இந்தியாவைத் தேடி வந்தடைந்தனர் அப்போது இந்தியா ஆரியர், அராபியர், முகமதியர் என பலரும் நுழைந்து கலந்து விட்டதால், ஐரோப்பியர்கள் விட்டுப்போன வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலந்தேயம் இல்லை, நாகரிகத் தமிழர் இல்லை, அவர்களின் செல்வ செழிப்புகள் அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தன.

ஐரோப்பியர்களின் வருகைகக்கு பின்னர் உள்ள வரலாறு நாம் அனைவரும் அறிவோம். இந்தியாவில் சிறு மற்றும் பெரிய சமாஸ்தானங்களாக இருந்த பகுதிகளை இந்தியா என்ற ஒரே நாடாக மாற்றியது அவர்கள்தான். பாரதம் என்று வட நாட்டவர்கள் கூப்பிடுவார்களே என்று சொல்ல வாறீங்களா? இப்போதைய தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் ஆரியர்கள், முகமதியர்கள் என அயலவர்கள் அதிகம் அவர்கள் நவீன வரலாற்று திரிப்பாளர்கள் ஆகையால் இந்தியா என்ற சொல்லை விரும்பாமல் பாரதம், பாரத் என சொல்வார்கள் அதற்கான காரணம் பாஞ்சாலம், மரகதம் இவ்வாறான நிலப்பரப்பை ஆண்ட அவர்களுக்கு இந்தியா என்றழைப்பதைவிட பாரதம் என்ற பெயரே பிடித்திருந்தது. பாரதம் என்ற சொல் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் பயன்படுத்தபட்டது.

நாவலந்தேயத்தை- ஆங்கிலத்தில் ஏன் India என்றழைக்கப்பட்டது தெரியுமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது நவலந்தேயம் இருந்த காலத்தில் ஆங்கிலம் என்ற மொழியே இல்லை. அதன் பின்னர் தோன்றிய மொழி ஆதலால் India ஆனது. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி ஆகையால் தமிழராகிய நாம் தமிழில் நாவலந்தேயம் என்று எழுதுவதுதானே சரியாக இருக்க முடியும்.

(இந்த பதிவு தோழி மரியம் பீவி அவர்களின் உந்துதலால் பதிவிட்டேன், ஆகையால் அவருக்கு நன்றி கூறி பதிவிடுகிறேன்)

11 comments:

  1. உங்களுடைய நாவலந்தேயம் கட்டுரை இன்று படிக்க நேர்ந்தது.
    மகிழ்ச்சியும் சற்று அதிர்ச்சியும் அடைந்தேன்.
    நம்முடைய கருத்து அங்கிகரிக்கப் பட்டிருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.
    (இந்த பதிவு தோழி மரியம் பீவி அவர்களின் உந்துதலால் பதிவிட்டேன், ஆகையால் அவருக்கு நன்றி கூறி பதிவிடுகிறேன்) என்ற உங்கள் நன்றியுணர்ச்சியில் அதிர்ச்சி அடைந்தேன்; எப்படி அவர் என்னை உங்களுக்கு முன்மொழியாமல் போனார் என்று.
    எது எப்படியோ!
    இப்படி என்னுடைய பல தகவல்கள் என்னை முன்மொழியாமல் எடுத்தாளப் பட்டாலும், எடுத்தாண்ட வகையில் நான் அங்கிகரிக்கப் பட்டிருக்கிறேன் என்ற வகையில் மகிழ்ச்சியே.
    தமிழ்அன்புடன்,
    குமரிநாடன்.
    kumarinadanr@gmail.com

    ReplyDelete
  2. இந்தியாவின் தமிழ்ப்பெயர்
    நாவலந்தேயம்!என இன்றுதான்
    அறிந்தேன்!
    கட்டுரை சிறப்பு!! மகிழ்வுடன்
    நன்றி தெரிவிக்கிறேன்!

    ReplyDelete
  3. 👍🏻சிறப்பான தகவல், நன்றி

    ReplyDelete
  4. இருவருக்கும் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  5. நான் இதுவரை கேளாத பெயர் தமிழில் மிகவும் அருமையாக உள்ளது நம் நாட்டின் பெயர்

    ReplyDelete
  6. படிக்கபடிக்கத் தெளிவும் நம் தமிழ் குடியே உலகனைத்துக்கும் மூத்தகுடி என்பதறிந்ததும் என் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடற்படாதது.

    ReplyDelete
  7. சிறப்பான கட்டுரை மகிழ்ச்சி...

    ReplyDelete
  8. ஆச்சரியமும்‌ ஆதங்கமும் கலந்த ஓர் உணர்வு. பள்ளியில் படித்தது வரலாறு அல்ல, அவை வெறும் திரிப்புக் கதைகள் என்று கூறியது 🔥✨

    ReplyDelete
  9. மிக்க மகிழ்ச்சி . புதிய பாரி மாணத்தில் நாவலர் தேயம்.'
    எனக்கு 58 வயது ஆனால் இன்று நான் உலகறியா சிறுவனாக உணர் கிறேன் .
    காரணம் நாவலந்தேயம்.
    நம்மிலிருந்து ந்தேயத்தை இந்தேயமாக்கி அது india வாக மறுவி இது தமிழ் தேசமாக உணர்கிறேன்.

    ReplyDelete
  10. தமிழர்களின் உண்மை வரலாற்றை உலகம் அறிந்துகொள்ளாவண்ணம் தமிழ் விரோத சக்திகள் திரித்து மறைத்துகொண்டிருக்கிளது. இருந்தாலும் முழதுமாக அவர்களால் மறைக்க முடயவில்லை என்பதே இதுபோன்ற ஆராய்ச்சி பதிவுகள் நிருபிக்கின்றன. இருந்தாலும் தமிழர்களின் தமிழ் வரலாற்றை அறிய ஆழிபேரலை அதற்க்கு முன லொமுரியா கண்டத்தின் முழு வரலாற்றையும் தமிழர்கள் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  11. பெருமையாக உள்ளது

    ReplyDelete