Wednesday, 30 September 2015

பதில் நீயே சொல்...

அன்பே விஜி,

உன்னுடைய கோபத்தையும் நான் ரசிக்கிறேன், பல்லே முழைத்திடாத குழந்தை கடித்தால் என்ன வலி உண்ணடாகுமோ அல்லது அக்குழந்தையின் நகமில்லாத விரலின் கீரல்தான் என்ன வலி தருமோ அல்லது நடை பயிலும் குழந்தையின் உதைபட்டு என்ன வலி உண்டாகுமோ அது போல்தான் உன் செல்ல கோபம் என் மனதில் வலியை உண்டாக்குகிறது இந்த வலி பட்ட நான் உன்னை ரசிப்பதா? அல்லது வருந்துவதா? பதில் நீயே சொல்...

உன்னுடைய மௌனத்தை வெறுக்கிறேன், கண் முன்னே நீ இருந்தும் நான் கண் சிமிட்டி உன்னை அழைக்கையில் என்னை கண்டும் காணாதது போல நீ இருக்கையில் அல்லது அருகில் பலருமிருக்க நான் மிக மெல்லிய குரலில் உன்னை அழைக்கையில் என் குரல் கேட்டும் கேளாதது போல் இருக்கையில் அல்லது கை ஜாடையிட்டு நான் கூப்பிடுகையில் கவனித்தும் கவனிக்காதது போல இருக்கையில் உன் மௌனம் என்னை வதைக்கிறது. உண்மை சொல் அன்பே உனக்கு எல்லாமே தெரியும்தானே? பதில் நீயே சொல்...

பதில் நீயே சொல்...

மொழி அறி(வு)தல்

மொழி என்பது நமது எண்ணங்களில் தோன்றும் விசயங்களை பகிரவும் கருத்துக்களை பரிமாறவும் உருவானது. மனிதன் தோன்றிய காலம் தொட்டு மொழியானது ஒலி வடிவில் உள்ளது.

உலகில் பல மொழிகள் உள்ளன அவற்றுள் மனிதனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் உண்ணத மொழிதான் நமது தாய்மொழி தமிழ். தமிழ் மொழியினுள் இல்லாத கருத்துக்களோ இலக்கியங்களோ வேறு எந்த மொழியிலும் இல்லை. இத்தகைய தமிழ் மொழிதான் தமிழருக்கு ஆயக்கலை என 64 கலைகளை எடத்துரைத்துள்ளது. அவற்றுள் ஒன்றை நாம் காண இருக்கிறோம்.

ஆயக்கலையான 64லில் நாம் இப்போது பார்க்க இருப்பது 61வதாக வரும் 'பிறமொழி எழுத்து அறிதல்'. அஃதாவது பிற மொழி எழுத்தை பார்த்து இது இன்ன மொழி என சொல்வதை குறிக்கவில்லை, பிற மொழியை எழுத படிக்க கற்றுக்கொள்வதை குறிக்கிறது. ஆகையால் உங்களால் முடிந்த வரை பிற மொழிகளை பயிலுங்கள் பயில்வதோடு மட்டுமல்லாது அம்மொழியிலும் புலமை பெற்றிடுங்கள்.

ஆனாலும் எந்த மொழியையும் பிறரின் கட்டாயத்திற்காகவோ அல்லது வேண்டாத வெறுப்பாகவோ படிக்க வேண்டாம். மேலும் பண்டைய தமிழகத்தில் நம் மக்கள் பிற மொழிகளை ஆவலுடன் கற்றதால்தான் கடல் கடந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது மேலும் கடல் கடந்த வணிகங்களையும் தமிழன் மேற்கொண்டான்.

தமிழன் என்பதில் பொருமிதம் கொள்வோம், தமிழின் தரம் தாழ்ந்திடாமல் பிற மொழிகளை கற்போம். மீண்டும் தமிழனே உலகின் சிறந்தவன் என்ற நிலையினை உருவாக்குவோம்.