Monday, 16 March 2020

கொரானா பீதியும் இந்தியாவும் 🇮🇳

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் மீண்டும் ஒருமுறை உங்களுக்கான கொரான குறித்த விழிப்புணர்வு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயங்களுக்காக இதனை எழுதுகிறேன். இந்த பதிவினை உங்கள் வாட்சப் பேஸ்புக் டுவிட்டர் இன்னும் பல இணையங்கள் வாயிலாக தாரளமாக பகிருங்கள், ஆனால் நோய் தொற்றின் தாக்கத்தையும் வீரியத்தையும் தயவுசெய்து பகிர வேண்டாம், ஏனெனில் மக்களை ஊடகங்கள் பலவாறு பயமுறுத்தியுள்ளது மேலும் நம் பங்கிற்கு நாமும் குழப்ப வேண்டாம் மேலும் என நினைக்கிறேன். நமது நாட்டு கலாச்சாரத்திற்கும் மக்களின் உறவு சார்ந்த உணர்ச்சியையும் மீறி நம்மை ஆளும் அரசுகள் எப்படி இதை கட்டுப்படுத்த போகிறது என்பதே சவாலான விசயம்..

சீன அரசு போல இந்திய அரசு தன்னிச்சை முடிவு எடுக்க முடியாது இராணுவ அடக்குமுறைகளை பிரயோகிக்க முடியாது வேண்டுமானால் அவர்கள் தனது நாட்டு மக்கள் நோயுற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சுட்டு கொன்றுவிடவும் அதிகாரம் இருந்தது இம்மாதிரியான அதிகாரம் இந்தியாவில் இல்லை இங்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிராந்திய கட்சி, சாதிக்கட்சி, ரப்பர் ஸ்டாம்ப் கட்சி, அமைப்புகள், சங்கங்கள் என இது போதாதென்று மனித உரிமை கழகம் என அரசை கேள்வி கேட்கும். இந்திய அரசும் சீன அரசு போல கடுமையாக நடந்துகொண்டால் அதிகபட்சம் 20 அல்லது 30 நாட்களில் கொரானாவை வென்று விடலாம்..

இந்திய அரசின் முன்னாள் இப்போது அச்சுறத்தலாக இருக்கும் ஒரே விசயம் நம் இந்திய மக்களின் உறவு சார்ந்த உணர்ச்சிகள். எளிதாக சொல்வதென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கோ அல்லது குடும்ப தலைவரு/விக்கோ கொரானா பாதிப்பு ஏற்ப்பட்டால் மருத்துவமனையில் (Isolate) தனிமைப்படுத்த படுவாரேயானால் சீன அரசு போல் வலுக்கட்டாயமாக சந்திக்க அனுமதிக்காமல் இருக்க முடியாது ஒருவேளை அப்படி முடிந்தால் நலம்தான். நமது மக்கள் உறவு சார்ந்த உணர்ச்சிகளால் கட்டுப்பட்டு எனக்கு நோய்வந்தாலும் பரவாயில்லை என் குழந்தையை நானே கவனிப்பேன், எனது மனைவியை/கணவரை நானே கவனிப்பேன் என்பார்கள் சிலர் அதற்காக சில குறுக்கு வழிகளையும் கையாழ்வார்கள்..

இப்படியான சூழ்நிலையில் இந்தியாவில் அரசும் மருத்துவக்குழுவும் என்ன செய்தாலும் பலனில்லை அதற்காக அப்படியே விடமுடியாது மாறாக இந்தியாவில் நம் இந்தியர்கள் அறிவாளிகள் அவர்கள் பிற நாடுகளை விட சற்று விழிப்போடு இருப்பார்கள் இல்லையென்றால் பல அறிவியல் உண்மைகளை இறைவன் வழியாக கடத்தி இன்றளவும் அதனை பயன்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இந்திய மக்கள் இப்போது செய்ய வேண்டியது தடுப்பு நடவடிக்கை மட்டுமல்ல நோய் தொற்றை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும் அதற்கு நாம் நமது உணவுமுறைகளை மாற்ற வேண்டும். கொரான அறிகுறியன்றி சாதரண காய்ச்சல் இருமல் சளி என எந்த தொந்தெரவு என்றாலும் வெந்நீர் அருந்த வேண்டும். மக்கள்கூடும் இடங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். காட்டன் ஆடைகளை அணிய வேண்டும் காரணம் பாலிஸ்டர் ஆடைகளில் வைரஸ் தொற்று உயிர் வாழும் நேரத்தைவிட காட்டன் ஆடைகளில் விரைவில் வாழ்ந்து அழிந்துவிடும். கைகளை சுத்தமாக வைத்திருக்க சோப்பு நீரிலோ அல்லது உப்பு கலந்த வெந்நீரிலோ கழுவ வேண்டும் கை நகங்களை வளர்க்காமல் வெட்டி சரியாக பராமரிக்க வேண்டும். தொண்டை சம்பந்தமான பிரச்சனை ஏற்ப்பட்டவுடன் வெந்நீர் மட்டும் அருந்த வேண்டும். தொண்டையில் இருக்கும் கிருமி மூச்சிக்குழாய் வழியாக நுரையீரலை அடையும் முன்னர் உணவுக்குழாய் வழியாக உணவுப்பையை அடைய வேண்டும். வெயில் காலம் என்றாலும் வெயிலை ஏற்றுக்கொண்டு பகலில் நல்ல வெயிலில் 30 நிமிடம் வேகமாக நடக்கலாம் அது உடம்பிலுள்ள வெப்ப ஆற்றலை அதிகரித்து வைரஸ் தொற்றை அழிக்க உதவும்..

உணவுப்பழக்கத்தில் தவறாமல் நாள்தோறும் ரசம் வைத்து சாப்பிடலாம். மஞ்சள், சீரகம், சுக்கு ஆகியவை சேர்த்து உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். விட்டமின் சி சத்து கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தரமான தேன் பருக கொடுக்கலாம். எப்போதும் உணவுவகைகளை சூடாக சாப்பிடலாம். சூப் வகைகளை தயாரித்து பருகலாம். நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்து அக்கம் பக்கத்திலிருப்பவர்களும் சுத்தமாக இருக்க உதவலாம். குறிப்பாக அரசு கொரானா பாதித்தவரை தனிமைப்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரானா பாதிப்பு என்பது எங்கோ யாருக்கோ இருக்கிறது நாம் எதற்கு பதற வேண்டும் என்பது போல் அல்ல. யாருக்கு இருந்தாலும் அது விரைவில் நமது உறவுக்கோ நமக்கோ வர வாய்ப்பிருக்கிறது ஆகையால் மக்களுக்கு விழிப்புணர்வுடன் கூடவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசுக்கும் மருத்துவ குழுவிற்கும் எப்படி உதவ வேண்டும் என எடுத்து கூறி உதவிடுங்கள்..

இவ்வளவு பெரிய செய்தியை வாசித்த நீங்கள் இதனை அடுத்தவருக்கு பகிராமல் விட்டுவிடாதீர்கள். இவன் உங்கள் அன்பு நண்பன் ரா.தமிழ்ச்செல்வன்..
+919842261255