Thursday, 14 September 2017

ஐல்லிக்கட்டு போராட்டம் முடியுற்றதா? முடிவற்றதா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் பலரும் போராட்டம் வெற்றி என மார்தட்டி சொல்கின்றனர். ஆனால் அரசும், ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும், எதிர் கட்சிகளும், சில அமைப்புகளும், முக்கியமாக BeTA போன்ற அமைப்புகளும் காளை மாடு இனங்களை அழித்து ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீர விளையாட்டை தடை என்று கூறமல் ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கு ஆயத்தம் ஆயிடுச்சு.

என்ன குழப்பமாக இருக்கிறதா? நம்ப முடியவில்லையா? ஆம் சொல்லப்போகும் உண்மைகள் யூகத்தின் அடிப்படையில்தான் ஆனால் BeTA மற்றும் அதற்கு ஆதரவானவர்களின் எதிர்கால திட்டமும் இப்படித்தான் இருக்கும். ஜல்லிக்கட்டை தடுக்க இயலாது பின்னர் எப்படி காளை மாட்டு இனங்களை அழிப்பது என்று பல யோசனைக்குப்பின் இப்போது களம் இறங்கி உள்ளது BeTAவும் அதற்கு ஆதரவான இந்த அரசும்.

மாடுகளுக்கு ஆதார் அட்டை இந்த திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் மனிதர்களுக்கு ஆதார் அட்டை ஏன் என்ற தகவலையே சரிவர சொல்லாத இந்த அரசு மாடுகளுக்கு ஆதார் அட்டையின் அவசியம் ஏன் என்பதை சொல்லவா போகிறது? நாம்தான் இதனைப்பற்றி நிறைய சிந்திக்க வேண்டும். நாம் ஏன் மாடுகளுக்கு ஆதார் அட்டை என்று கேட்டால் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை இந்துத்துவா என விமர்சிக்கும் ஏனெனில் அது நம் வாயை அடைக்க மட்டுமே. ஆளும் கட்சியோ விமர்சனம் என்ன புதிதா என கண்டுகொள்ளாது இறுதியில் நாம் மாடுகளுக்கு ஆதார் ஏன் என்ற கேள்வி மழுங்கடித்துவிடும்.

மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது தெரிகிறது. மாடுகளுக்கு ஆதார் அட்டைகள் வந்துவிட்டால் அவர்களுக்கு அழிக்கப்படவேண்டிய காளை மாடுகளின் எண்ணிக்கை தயாராகி விடும். ஆதார் அட்டை எடுக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் அப்படி ஒரு நிலை வந்தால், ஒவ்வொரு ஆதார் அட்டை உள்ள மாட்டுக்கும் நிதி உதவி என அறிவிப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு அரசு அனைத்து பசு மாடு மற்றும் காளை மாடுகளுக்கும் தொடர்ந்து நிதி உதவி வழங்கும்.

மாடுகளுக்கு ஆதார் அட்டை மற்றும் அதற்கு நிதி இவ்வாறாக இந்தியாவில் உள்ள அனைத்து மாடுகளும் அரசின் மேற்பார்வையில் வந்துவிடும். பின்னர் கால்நடைகளுக்கு திடீர் நோய் பரவும் (பரப்பிவிடுவர்). நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் மற்றும் கால்நடைகள் இறந்து போகும் இதுதான் தக்க சமயம் என அரசு அனைத்து மாடுகளுக்கும் அரசு நோய்தடுப்பு மருந்து, அரசு கால்நடை மருத்துவமனை மூலமாக வழங்கும். உண்மையில் இது நோய் தடுக்கும் மருந்து அல்ல மாடுகளுக்கு இனவிருத்தியை தடுக்கும் மருந்து.

மாடுகளுக்கான இனவிருத்தியை தடுப்பதால் பிற்காலங்களில் காளை மாடுகள் இனங்களின் இனப்பெருக்கத்தையே நிறுத்திவிடலாம் காளை மாடுகள் இல்லை என்றால் தரமான நாட்டு பசு மாடுகள் இல்லை. காளை மாடுகள் இல்லை தரமான பாலும் பாலில் இருந்து கிடைக்கும் பொருட்களும் இல்லை. காளை மாடுகள் இல்லை என்றால் இயற்கை விவசாயம் சீர்குலையும். காளை மாடுகள் இல்லை என்றால் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் இல்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாம் இப்போது மெரினாவிலும் மாநகர, நகர மற்றும் அனைத்து ஊர்களிலும் போராட்டம் செய்தோம் ஆனால் பிற்காலத்தில் நாம் போராட முடியாது காரணம். ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதும் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தேவையான காளை மாடுகள் இந்தியாவில் இல்லை என்றாகிவிடும். இது ஒரு எச்சரிக்கை பதிவு. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாம் இதனை அறிவுசார் எதிர்ப்பின் மூலமே தடுக்க முடியும். முழுமையாக தடுக்க இயலுமா என்பது கேள்விக்குறியே..