Thursday, 8 December 2016

யார் இந்த கருணாநிதி!!!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் திமுக எப்படி திரு.மு.கருணா(நாய்)நிதியின் திமுகவானது. பரம்பரை அடிமைகளே படித்து தெளிவுற்று உங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்க..

திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க இன்றைய திமுகவின் பரம்பரை அடிமைகள்..

ஞாபகப்படுத்துவோமே… 

1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா?இல்லை. ஆனால் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்கா என நீட்டி முழங்குவார்...

2. 1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, "தம்பி வா, தலைமையேற்க வா" என்று அழைத்தது கருணாநிதியையா? இல்லையே, நாவலர் நெடுஞ்செழியர்தானே!! 

3. திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இந்த ஐவரில் ஒருவராகக்கூட கருணாநிதி இல்லயே!!

4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை ஒருபோதும் சொன்னதே இல்லையே. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் நெடுஞ்செழியர்தானே முதல்வரானார்!!

5. எம்ஜிஆரின் உதவியோடு, உதவி என்பதைவிட அவரிடம் பிச்சையெடுத்து, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலர் நெடுஞ்செழிய்யரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்!!

6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென கருணாநிதியிடம் கேள்வி கேட்டதற்கு!! 

7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார்தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி என்ற மணிமகுடம் சூட்டிக்கொண்டார்!!

8. இந்திய துணைக்கண்டத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது கலைஞர் கருணாநிதியுடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே கருணாநிதியை வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது!!

9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்தால் சந்தி சிரிக்குமே என்றும், தான் குற்றமற்றவன் என நிருபிக்க வழியிருக்காது என்றும், இந்திரா காந்தியின் காலில் விழுந்து, வழக்குகளை தவிடுபொடி ஆக்கியவர்தான்  கலைஞர்!!

10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி என்பது கானல்நீராகவே இருந்தது அப்பதவி கிடைக்கவே இல்லையே!!

11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வர முடிந்ததே தவிர கருணாநிதி நல்லவர், வல்லவர் என்றல்ல மறவாதீர்!!

12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது "என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்" என வீண்பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர்தான் கருணாநிதி!!

13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் மதுரையில்  கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே!!

14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று அப்பாவி பத்திரிக்கை ஊழியர்கள் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யார் என்றும் கருணாநிதிக்கு தெரியாது தானே!!

15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக உருவெடுத்திருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே!! இவர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்தா இந்த நிலையில் இருக்கிறார்கள். திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்க முடியுமா இந்த திடீர் தலைவர்களால்!!

16. எந்த வித தேர்வும் தகுதியுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைவர் என அறிவித்ததாரே குறைந்தபட்சம் அன்பழகனிடம் விவாதித்தாரா இதைபற்றி. கூடவே இருந்த அன்பழகன் அழகாக ஓரம் கட்டப்பட்டார் கருணாநிதியால்!!

17. கடந்த 2006-2011 ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், குறுநில மன்னராட்சி நிலை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், ஏர்செல்-மேக்ஸிஸ் ஊழல் வழக்குகளென, அதன்பிறகும்கூட காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அறிந்தவர் கலைஞர் கருணாநிதி ஒருவரே!!

18. எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி. அது கருணாநிதி ஒருவருக்கே!!

இப்ப புரிகிறதா யார் இந்த கலைஞர் கருணா(நாய்)நிதி என. இன்னும் புரியவில்லை எனில் இன்னும் ஒன்றே ஒன்று.

* திருக்குவளை எனும் சிற்றூரிலிருந்து இரயிலில் கட்டணச்சீட்டு வாங்க வழியில்லாமல் கள்ளத்தனமாக சென்னை வந்திறங்கிய தட்சணாமூர்த்தி கால ஓட்டத்தில் கையைப்பிடித்து காலைப்பிடித்து ஒரு பதவியைப்பெற்று பின்னர் அந்த பதவி சுகத்தால் அதிகார மிகுந்த பதவிக்காக்காக அடுத்தவனுக்கு குழி தோண்டி பதவியும் பவுசுமாக இன்று உலக கோடிசுவரர்கள் பட்டியலில் இடம் பிடித்து பதவியில் இல்லாததால் பதவி வெறிபிடித்து பகட்டு நாடகங்களை அறங்கேற்றுபவர்தான் கருணாநிதி!!!.

Wednesday, 7 December 2016

புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா.

அறிமுகம்

இப்பதிவில் புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா பற்றிய எனது நினைவுகளும், விமர்சனங்களும், பாராடடுகளும் கலந்திருக்கும் உண்மையிலேயே அம்மா ஜெயலலிதா மீது  ஈடுபாடு இருந்தால் படிக்கவும்.

1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மைசூரில் பிறந்தார். அன்று முதலான படிப்பு, நடிப்பு & அரசியலில் காலடி வைப்பது இது வரையிலான காலகட்டங்களில் நான் ஜெயலலிதா அவர்களை அறிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் காலமானர் என்ற செய்தி என்னை உழுக்கியது. என்னை சுற்றிய நிகழ்வுகள் அனைத்திலும் ஒரு தேக்கநிலையை உணர்ந்தேன். இப்படி ஒரு சொல்லொல்லா துயரநிலையை நான் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. ஆம், அய்யா அப்துல் கலாம் இறப்பைக்கூட என் மனது ஏற்றுக்கொண்டது ஆனால் அம்மா ஜெயலலிதாவின் மறைவு என்னை உழுக்கியது.

என்னைப்பற்றிய குறிப்பு

ரா.தமிழ்ச்செல்வனாகிய நான் 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் நாள் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் திரு.க.ராஜா, திருமதி.ரா.தங்கேஸ்வரி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன்.

எனது அப்பா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியமான நபர் மற்றும் சிறந்த பேச்சாளாராக இருந்தார்.  எனது அப்பாவிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது மிகுந்த பற்று ஆகையால் கட்சி ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். எனது அப்பாவின் வழியில் வந்த எனக்கும் எம்ஜிஆர் மீதும் அவர் ஆரம்பித்த கட்சியின் மீது ஈடுபாடு தானாகவே வளர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் அறிமுக அறிவு

நான் பள்ளிக்கூடம் செல்லும் பருவம் அது. அதற்கு முன் எனக்கு அரசியல் பற்றி ஒரு கதையும் தெரியாது இரண்டு சொல்லாடலை தவிர. "கரண்டு கட்டு கருணாநிதியை வெட்டு" மற்றும் "முப்பது பைசா முறுக்கு மூப்பனாரை நொறுக்கு" உண்மையில் கருணாநிதி மற்றும் மூப்பனார் இவர்கள் யார் என்றே தெரியாத காலகட்டம் அது.

மூன்றாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்து விடுமுறைக்காலம் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் வேகமாக நடைபெற்ற காலம். 1991 மே 21ம் தேதி அன்று இரவு நடந்த ராஜீவ் காந்தியின் படுகொலை அதுவரை அரசியல் வாடை இல்லாத என்னை மே 22ம் தேதி முழுக்க தொலைக்காட்சி முன் நிறுத்தியது. அன்று முழுவதும் தொலைக்காட்சிகளை கவனிக்கிறேன் பெரியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கிறேன் சற்றே எனக்கு அரசியல் அறிவு அறிமுகமானது. பின்னர் ஓரிரு நாட்களில் அனைவரும் அதைப்பற்றி பேசுவதைக்குறைத்தனர் நானும் எனது விடுமுறையை முடித்தேன்.

அம்மா ஜெயலலிதா அறிமுகம்

ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர். மத்திய அரசு என்றால் என்ன, மாநில அரசு என்றால் என்ன, பிரதமர் யார், முதல்வர் யார், இவ்வாறான அடிப்படை அரசியல் அறிவை நான் பெற்றிருந்தேன். முதல் முறையாக 1991 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் அதிமுக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். என்னை சுற்றிய நிகழ்வுகளும் அதனை நோக்கியே இருந்தது. அப்போதுதான் எம்ஜிஆரின் அதிமுக கட்சியை நிர்வகிப்பது புரட்சித்தலைவி ஜெயலலிதா பற்றிய அறிமுகம் கிடைத்தது.

1991 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றியடைகிறது. சட்டசபையில் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி  அமைக்கிறது, பாராளுமன்றத்தில் கூட்டணி கட்சியோடு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. யாராவது நமது முதல்வர் யாரென கேட்டால் பெருமையாக சட்டென செல்வி.ஜெயலலிதா என்பேன். பிரதமர் யாரென கேட்டால் யோசித்தே நரசிம்மராவ் என்பேன்.

புரட்சித்தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா என்ற பெயரை கேட்டாளே குதூகலிக்க ஆரம்பித்தேன். பள்ளி தோழர்களிடம் அதிமுக பெருமை பேசுவேன். நான் படித்த பள்ளியில் படிப்பை தவிர அனைத்திலும் முதன்மை மாணவனாகிய என்னை யாரும் எதிர்த்து பேசமாட்டார்கள்.

ஜெயலலிதா மீதான வெறுப்பு

1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக்காலத்தில் நான் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்த காலம் என்னை சுற்றிய சூழல்களில் மாறுதல் ஏற்பட்ட காலம். முதல் மாறுதல் துவக்கப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளி. நான் படித்த மேல்நிலைப்பள்ளி அரசு உதவியுடன் கூடிய CSI சபை சார்ந்த பள்ளி அந்த பள்ளியின் ஆசிரியர்கள் பலர் அதிமுகவிற்கு எதிரானவர்கள் அவர்களின் விசம பிரச்சாரங்களால் ஜெயலலிதா மீது வெறுப்பு ஏற்பட்டது.

இரண்டாவது மாறுதல் சன் டிவி. ஆம், எனது பள்ளிப்பருவத்தில் 5ம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்த சமயம் அது. அதற்குமுன் தொலைக்காட்சி பெட்டியை போட்டால் ஏதேதோ நிகழ்ச்சிகள் தூர்தர்சனில் ஒளிபரப்பாகும் சில நேரம் ரூபவாஹினி என்ற இலங்கை ஒளிபரப்பு பார்ப்பேன். அப்போது "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்ற வாக்கியமே பிரம்மிப்பாக இருக்கும். பொழுது போக்கு அனைத்தும் சன் டிவியை நோக்கி மாறியது. அதில் மிகைப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான விசம பிரச்சாரங்களால் அவரை வெறுக்க ஆரம்பித்தேன்.

அவ்விரண்டு பாதிப்புகளும் ஏன் எதனால் என்று பின்னாளில் உணர்ந்து புரிந்துகொண்டேன். வெறுப்புகள் அனைத்தும் இன்னும் பலமான ஆதரவாக மாறியது. ஆனால் இன்றுவரை அந்த வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் அவரது ஆடம்பர திருமணம் ஜெயலலிதா மீது நான் வைக்கும் ஒரே விமர்சனம்.

ஜெயலலிதாவின் அரசியல் சரிவு

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்குகிறது பல காரணங்களால் ஜெயலலிதா மீது எனக்கு வெறுப்பு இருந்தது ஆனாலும் அதிமுக காரனாகிய நான் அந்த 13 வயதில் புரட்சித்தலைவரின் சின்னமான இரட்டை இலை சின்னமும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் தோற்கக்கூடதென நினைக்கிறேன் ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. திரும்பும் திசையெல்லாம் எதிர்ப்பு அதற்கு காரணம் சன் டிவி. ஆம் அவர்கள்தான் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தாய்மார்களின் மனதை விசம பிரச்சாரத்தால் தவிடுபொடியாக்கிய கயவர்கள். உண்மையில் 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக்காலத்தில் அதிமுக காரர்களுக்கே ஜெயலலிதா ஆட்சி மீது வெறுப்பு இருந்தது உண்மை.

ஜெயலலிதா மீதான வியப்பு

1996 சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த புரட்சித்தலைவியை அத்தோடு அரசியலில் முடியுற்றுப்போனார் என்று ஏளனம் செய்யத்தொடங்கினர். எனக்கும் அவ்வறே தோன்றியது.  ஆனால் 1998ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தமிழகத்தில் 39 பாரளுமன்ற தொகுதியில் கூட்டணியாக 30 தொகுதியும் தனித்து 18 தொகுதியும் வெற்றி பெறச்செய்தார். அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறேன். தெளிந்த அரசியல் ஞானத்துடன் அம்மா அவர்களை மிகுந்த வியப்பாக பார்க்கிறேன்.

சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்னர் அரசியலில் பெரிய சம்மட்டி அடி வாங்கிய எங்கள் புரட்சித்தலைவி உண்மையிலேயே இரண்டே ஆண்டில் புது புரட்சியே செய்துவிட்டார். முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி என்ற ஒரு கட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. ஆனால் 13 மாதங்களில் வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்படுகிறது அந்த நிகழ்வின் சூத்திரதாரியாக மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் வல்லமையுள்ள பெரிய அரசியல் தலைவி ஆனார் இன்றும் என்னால் மறக்க இயலாது.

அம்மாவின் ஆளுமை

1999 பாரளுமன்ற தேர்தலில் சிறு பின்னடைவு ஆனால் அது எதிர்பார்த்த ஒன்றே. ஆம், நான் அதிமுக தோற்க கூடாது என நினைத்தாலும் அதிமுகவின் வெற்றிக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அதிமுகவினர் மனதில் அம்மா மீதான நம்பிக்கை பன்மடங்கு உயர்ந்தது. 2001 சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஆட்சிக்குத்தான் வழி வகுக்கும் என ஊடகங்கள் ஆரூடம் பேசின ஆனால் அம்மாவின் அரசியல் சாதுர்யத்தால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்து 141 தொகுதிகளுடன் தனிப்பெரும்பான்மையில் ஆட்சியமைத்தார். 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக்காலம் அம்மாவின் ஆட்சி காலங்களிலே மிகச்சிறந்த ஆட்சிக்காலம்.

இந்த காலகட்டம் எனது கல்லூரி நாட்களில் நான் அரசியல் பற்றி பல விழிப்புணர்வை பெற்றிருந்தேன். 2001 முதல் 2006 வலையிலான காலங்களில் அரசின் இலவசங்கள் என்று ஏதும் கிடையாது பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. சில அவசரச்சட்டங்கள் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தீட்டப்பட்டன.

அம்மாவின் சட்டபோராட்டம்

1991 முதல் 1996 வரையிலான ஆட்சிகாலத்தில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும் அதனை திமுக பெரிய அளவில் பூதாகாரப்படுத்தி பொய்யான வழக்குகள் பல பதிந்தது. அது என் போன்ற தொண்டர்களை பாதித்தது.  புரட்சித்தலைவியை உண்மையில் அவர்கள் இந்த அளவிற்கு சீண்டாமல் இருந்திருந்தால் அவரும் பலமாக எழுந்து வந்திருக்க மாட்டார் அவ்வளவு அழுத்தம் அவ்வளவு நெருக்கடி ஆனாலும் மனம் தளரவில்லை பயந்து ஓடவில்லை அரசியல் வழக்குகளுக்காக சமாதானம் செய்துகொள்ள வழியிருந்தும் அவ்வாறு செய்யவில்லை அவருக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தது ஆகையால் அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்திலேயே சந்தித்தார். ஒவ்வொரு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அரசியல் நோக்கோடு மத்திய ஆளும் அரசுகளாலும் திமுக கட்சியாளும் மற்றும் நீதிமன்றத்தாலும் இழுத்தடிக்கப்படுகிறது. ஆனால் அவ்வழக்கை புரட்சித்தலைவி ஜெய்லிதா அவர்கள் இழுத்தடிப்பதாக சில அரைவேக்காடுகள் கூவித்திரிகின்றன.

கடைசி சரிவு

அதிமுக அரசின் சில அவசரச்சட்டங்கள் மதம் சார்ந்த பழமையான மரபுகளை சாடியதால் 2004 பொதுத்தேர்தலில் பெருத்த சரிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒன்றில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை பல எதிர்மறையான கருத்துக்கள் நிலவியது. ஆனாலும் 35% மாறாத அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவியை நம்பி வாக்களித்ததால் எதிர் கட்சிகள் சற்று கலக்கத்தில்தான் இருந்தன. அஃதோடு பல அவசரச்சட்டங்களை திரும்பப்பெற்றார். மக்களுக்காக மட்டுமே அவர் அச்சட்டங்களை திரும்பப்பெற்றார்.

2006 சட்டமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி, பணபலம், மற்றும் இலவச அறிவிப்புகளால் மட்டுமே அதிமுகவை வீழ்த்தமுடியும் என்று வியூகம் அமைத்து பணநாயக முறையை முழு அளவில் கையாண்டு. மக்களை இலவசம் என்னும் மாயவலைக்குள் சிக்க வைத்த தேர்தலை சந்தித்தது. இருந்தும் திமுக மைனாரிட்டி ஆட்சியையே அமைக்க முடிந்தது. இன்றுவரை நான் எனது திமுக சார்பு நண்பர்களிடன் எள்ளி நகையாடுவதுண்டு. அதுவே இன்றுவரை அவர்கள் தமிழகத்தில் ஆட்சியமைத்த கடைசி தேர்தல்.

2009 நாடளுமன்ற தேர்தலிலும் பெரிய கூட்டணி, பண பலம் மற்றும் ஊடகத்தின் உதவியால் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது இந்த வெற்றிதான் இன்றுவரை திமுகவிற்கு கிடைத்த கடைசி வெற்றி தொடர்ச்சியாக 3 சரிவுகளை சந்தித்த அதிமுக மக்கள் மத்தியில் சுமார் 38% நிரந்தர வாக்குகளால் நிமிர்ந்தே நின்றது. என் போன்ற தொண்டர்கள் நம்பிக்கையை அந்த 38% வாக்குகள் காப்பாற்றியது.

அம்மாவின் ஓயாத புகழ்

2011 சட்டமன்ற தேர்தல் பெரிய வியூகம் எதுவும் கிடையாது திமுக வரக்கூடாது என்ற ஒரே எண்ணம் விஜயகாந்தின் தேமுதிக மற்றும் இதர சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவை பந்தாடினார். தேமுதிகவுடன் கூட்டணி இல்லாமலும் வெற்றி பெரும் என நான் பல விவாதங்களில் பேசினேன். திமுகவிற்கு எதிர்கட்சி என்ற தகுதி கூட இல்லாமல் போனது. நல்லாட்சிக்கு உதாரணமாக இருந்த இந்த ஆட்சியில் எனக்கு பிடிக்காத விசயம் இலவசம் மட்டுமே.

2014 பொது தேர்தல் நான் உட்பட தொண்டர்கள் அனைவருமே பாஜகவுடன் இணைந்துதான் அதிமுக இந்த தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்த்திருக்க.  அம்மா ஜெயலலிதா அதிரடியாக தனித்து போட்டி என அறிவித்து 39 தொகுதிகளில் 37 தொகுதியில் வெற்றி பெறச்செய்தார் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள். இவ்வெற்றியினால் இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தார். என் போன்ற தொண்டர்களுக்கு எவ்வளவு ஆனந்தம் அதனை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியே.

2016 சட்டமன்ற தேர்தலில் தெளிவான வியூகம் அமைத்து தனது அதிமுக தொண்டர்களை மட்டுமே நம்பி களமிறங்கினார் சில "ராஜதந்திரம்" செய்து கூட்டணி அமைக்காமல் பிற கூட்டணிகள் பலமானதாக உருவாகவிடாமல் மீண்டும் வெற்றி பெறச்செய்தார். இவ்வெற்றியின் மூலம் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுத்தார். (ராஜதந்திரம் link வழியாக என்னுடைய பழைய படைப்பை வாசிக்கவும்)

அம்மாவின் மறைவு

நல்லாட்சி சிறப்பாக நடந்துகொண்டு இருக்கும் வேளையில் செப்டம்பர் 22ம் தேதி இரவில் அம்மவின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருதமுவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலில் சாதரண காய்ச்சல் என்று அறிவிக்கப்படுகிறது பின்னர் நாட்கள் செல்ல நுலையீரல் தொற்று என்று அறிவித்தனர் இதற்கிடையில் அம்மா இறந்துவிட்டார் என வதந்திகள் பல பரவியது என் போன்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலங்கி போயினர். பின்னர் படிப்படியாக குணமடைவதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டதால் சற்று நிம்மதி அடைந்தேன்.

டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் அம்மா எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் என அப்பல்லோ அறிவித்தது. தொண்டரகள் அனைவரும் ஆராவாரத்துடன் அம்மாவை வரவேற்க தயாரானார்கள். எனக்கும் இதற்கு பின்னரான ஆட்சி அமோகமாக இருக்கும் என தோன்றியது. ஆனால் திடீரென டிசம்பர் 4ம்தேதி இருதயப்பிரச்சனை காரணமாக அம்மா உடல்நிலை பாதிக்கபட்டது என அறிவிக்கப்பட்டது பல மருத்துவ குழுக்கள் விரைந்தன தொண்டர்களின் நம்பிக்கை சிறிது சிறதாக தகர்ந்தது ஒவ்வொரு தொண்டனும், ஏன் மாற்றுக்கட்சியினரும் எதிர்பாரா வண்ணமாக டிசம்பர் 5ம் தேதி இரவு இருதய செயலிழப்பு காரணமாக அம்மாவின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது.

அம்மா இறந்த செய்தியை யார் அறிவிப்பது மக்கள் மற்றும் தொண்டர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என ஒருவித பதட்டத்துடன் அப்பல்லோ நிர்வாகம் அதனை அறிவித்தே விட்டது எதற்கும் அஞ்சாத என் மனம் ஆடிப்போனது. என்னை சுற்றிய சூழல்கள் அனைத்தும் மாறிப்போனது. என்னையும் அறியமல் சிந்தனையின்றி அறிவிப்பை மாற்றுவார்களா என்ற கணத்த இதயத்துடன் கண்கலங்கியவாரே தொலைக்காட்சிமுன் அமர்ந்திருந்தேன்.  கடைசியாக தொலைக்காட்சியில் அம்மா உடல் போயஸ் கார்டனை அடைந்தது நான் துயர்தோய்ந்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியாது.

ரோல்மாடல் அம்மா

* தன்னம்பிக்கையின் அடையாளம் அம்மா.
* ஆளுமையின் அடையாளம் அம்மா.
* விடாமுயற்சியின் அடையாளம் அம்மா.
* தலைக்கணம் என்று விமர்சித்தாலும் நிலைத்தன்மையின் அடையாளம் அம்மா.
* மக்களின் நிரந்தர முதல்வர் அம்மா.
* ஏற்ற பொறுப்பினை உணர்ந்து செயலாற்றும் தலைவி அம்மா.
* பெண்களின் அவதார நாயகி அம்மா.
* தாய்மை அடையாத தாயுள்ளம் அம்மா.
* இன்னும் எவ்வளவோ சொல்லலாம் அம்மாவைப்பற்றி, வார்த்தைகளால் அடக்கவல்லா வல்லமைதான் அம்மா.

ஏனோ அம்மா ஜெயலலிதாவின் இறப்பிற்கு முன் தீவிர தொண்டனாகிய நான் அம்மா என்று அழைத்ததில்லை என்னை பெற்ற தாய்தான் என் அம்மா என்றிருந்தேன். ஆனால் இன்றோ அம்மா ஜெயலலிதாவை இழந்தபின் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என அம்மா என்றழைத்தாலும் அம்மா ஜெயலலிதா வரமாட்டார்களே என வருந்துகிறேன்..

"மக்களால் நான் மக்களுக்காக நான்"
-அம்மா

பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க..
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க...